தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை குறித்து பார்க்கலாம். இரு பாலர் பயிலும் பள்ளிகளில் தேர்ச்சி விதகம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடந்தது.
இதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்: அரசுப் பள்ளிகள்- 92.16 % அரசு உதவி பெறும் பள்ளிகள்- 96.14% தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.72% இரு பாலர் பள்ளிகள்- 95.30% பெண்கள் பள்ளிகள்- 97.08 சதவீதம் ஆண்கள் பள்ளிகள்- 90.49%
இயற்பியலில் 98.87 சதவீதம் பேரும் வேதியியில் 98.82 சதவீதம் பேரும் உயிரியலில் 99.49சதவீதம் பேரும் கணிதத்தில் 99.12 சதவீதம் பேரும் தாவரவியலில் 98.62 சதவீதம் பேரும் விலங்கியலில் 98.69 சதவீதம் பேரும் கணினி அறிவியலில் 99.84 சதவீதம் பேரும் வணிகவியலில் 97.55 சதவீதம் பேரும், கணக்குப் பதிவியலில் 98.04 சதவீதம் பேரும் வரலாறு பாடத்தில் 97.90 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.










