Saturday, August 15, 2026
-- Advertisement--

“தமிழர் பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள்!”… முதல்வர் விஜய்க்கு உருக்கமான கோரிக்கை!

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், தமிழகத்தின் பாரம்பரிய 24 கலைகளை பாதுகாக்கவும், வளர்க்கவும் தமிழக முதல்வர் விஜய்க்கு சமூக வலைதளத்தின் மூலம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். அவரது பதிவு தற்போது கலை ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அந்த பதிவில், தமிழர் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய கலைகள் காலப்போக்கில் மறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் மத்தியில் இந்த கலைகளை மீண்டும் கொண்டு செல்ல அரசு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி கல்வியுடன் இணைத்து கலைப் பயிற்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாவட்டம் தோறும் கலை மையங்கள் அமைத்து, பாரம்பரிய கலைஞர்களுக்கு நிதியுதவி, மாதாந்திர ஊக்கத்தொகை மற்றும் நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். “24 கலைகள் உயிரோடு இருந்தால்தான் நமது பண்பாட்டு அடையாளமும் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும்” என்ற கருத்தையும் அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

அல்போன்ஸ் புத்ரனின் இந்தக் கோரிக்கை சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு அல்லது முதல்வர் விஜய் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles