இந்தியாவில் விமானங்களில் அறிவிப்பு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அறிவிப்பு அறிவிக்கிறார்கள் ஏன் தமிழ் மொழியில் அறிவிப்பை இதுவரை அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்று பலரும் கேள்விகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்டிகோ விமானத்தில் கேப்டனாக இருப்பவர் வடசென்னையை சேர்ந்த பிரிய விக்னேஷ் அவர் சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்புகளை அறிவித்து அசத்தியுள்ளார். விமானத்தில் தமிழ் அறிவிப்பு இதுவே முதல் தடவை. இந்தப் பெருமை விக்னேஷுக்கு சேரும்.
cccஅந்த விமானத்தில் விக்னேஷ் அறிவித்தது தற்பொழுது நாம் கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம். இன்னும் பத்து நிமிடங்களில் காவிரி ஆறு காவிரி கொள்ளிடம் என பிரியும் இடத்தை காணமுடியும். இந்த இரண்டு ஆறுகள் பிரியும் இடத்தில் உள்ள இடத்துக்கு ஸ்ரீரங்கம் என்று பெயர், உங்களுக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் தெளிவான காட்சியாக உங்களுக்கு அமையும் என்றும் . அதனைத் தொடர்ந்து மதுரைக்குச் செல்வது பற்றியும் அழகிய தமிழில் அறிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.