தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. இந்தப் படத்தில் இவருக்கு வில்லி வேடம் என்றாலும் இதற்கு அடுத்து வந்த பட வாய்ப்புகள் எல்லாமே கதாநாயகி வேடங்கள் ஆகவேஅமைந்தன. கல்லூரி படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் தமன்னா.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறா. ர் இவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த தமன்னா பல புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வந்த பொழுதும், தற்போது நடுக்காட்டில் ட்ரிப் சென்று உள்ள புகைப்படங்களை வெளியிட்டு, இயற்கையோடு தொலைந்து விடுங்கள் என்று கமென்ட் செய்துள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் ஊரடங்கு காலத்தில் இந்த ட்ரிப் தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.