தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் இறந்துவருகின்றனர். சிலருக்கு இழப்பு தானாகவே நிகழ்கிறது. சிலர் அதை தாமாகவே நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் பிரபல இந்தி நடிகர்களில் ஒருவராவார்.
இவர் ஹிந்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள ஒவ்வொரு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சிறந்த நடிகரை தாண்டி சிறந்த மனிதர் என்று தன் சக நடிகர்கள் பாராட்டப்பட்டவர்.
இருப்பினும் இவர் மன அழுத்த காரணத்திற்காக தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நேற்று காலை செய்திகள் வெளி வந்தது. இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் இவர் கடந்த 2016ம் ஆண்டு வரை ஆறு வருடங்களாக அங்கீதா லோகன்ட் என்ற நடிகையுடன் காதலில் இருந்தார். இருவரும் பிரிந்து நான்கு வருடங்கள் ஆயினும் தற்போது இவரின் மறைவிற்கு அவர் 4:00 மணி அளவில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.
அதில் கடவுள் உங்கள் வாழ்க்கையில் இருந்து சிலரை நீக்குகிறார் என்றால் அவர் உங்களுடன் நடந்த உரையாடலை பற்றி கேட்டு உள்ளார் என்று வைத்தார், அதனை சில மணி நேரங்களிலேயே அவர் டெலிட் செய்துவிட்டார்.
இந்நிலையில் அவர் ஏற்கனவே சுஷாந்த் பற்றி சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.