Tuesday, November 5, 2024
-- Advertisement--

மறைந்த சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாராகிறது..!! டைட்டில் என்ன தெரியுமா.?

சமீபத்தில் இந்திய மக்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்த சம்பவம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் இறப்பு. இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வளர்ந்து வரும் முன்னணி நடிகரான இவர் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் உலகப் புகழ் பெற்ற இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவர் மரணம் தற்கொலை செய்து கொண்டது பற்றி பல சர்ச்சைகள் தற்போது எழுந்துள்ளன.

பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ள சல்மான்கான் உட்பட பல நடிகர்கள் இவர் தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது. இந்த படத்திற்கு தற்கொலையா.? கொலையா.? என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஜய் சேகர் குப்தா மற்றும் ஷாமிக் மௌலிக் இருவரும் இணைந்து இயக்கம் உள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க சுஷாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இல்லாமல் அவர் திரையுலக வாழ்க்கையை மட்டம் தட்ட நினைத்தவர்கள் மற்றும் அவருக்கு எதிராக சதி செய்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அது படமாக எடுக்கப்படும் என்று சாலிக் மவுலிக் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார.
இந்தப் படம் வெளிவந்தால் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் ஒரு சிறிதளவும் மாற்றமில்லை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles