சமீபத்தில் இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது சுஷாந்த் மரணம். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது முப்பது வயதிலேயே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இவர் மரணம் குறித்து பல வதந்திகள் பிரச்சினைகளும் எழுந்தன. இவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை இவரை கொலை செய்து விட்டனர் அல்லது தற்கொலைக்குத் தூண்டி விட்டனர் என பலரும் சொன்னதால் இந்த பிரச்சினை மிகவும் பெரியதாக மாறியது.
இந்நிலையில் வெளிநாட்டவர் ஆன ஸ்டிவ் ஆவிகளுடன் பேசும் திறன் உடையவர் என்று மக்களால் நம்பப்படுகின்றது. இதனால் இவருக்கு பல பல பேர் சுஷாந்த் ஆவியிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டதன் படி அவருடன் பேசியுள்ளார் . அப்பொழுது என்ன கூறினார் என்பதை வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார் அதில்
நீங்கள் எப்படி இருந்தீர்கள் எனக் கேட்டதற்கு சுஷாந்த் சிங் எனப்படும் அந்த குரல் ” நான் கடவுளிடம் இருக்கிறேன், சொர்க்கத்தில் நன்றாக இருக்கிறேன், சில ஆண்களுடன் பெரிய வாக்குவாதம் நடந்தது, அவர்கள் நகங்களை கொண்டு வந்தார்கள், அது இப்போது முடிந்தது என்று கூறியுள்ளார். மேலும் நட்பு என்ற பெயரால் என்னை கொலை செய்து விட்டார்கள் . என்றும் நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வது சிறந்தது என ஒரு பெண்குரல் சொல்லி முடிவு பெற்றது. இது சுஷாந்தின் அம்மாவாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த செயல் பலருக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பலரும் சுஷாந்தின் குரல் அப்படியே உள்ளது எனவும், அவரின் சிரிப்பு அப்படியே உள்ளது, எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.