பாலிவுட்டின் பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங். இவரது நடிப்பு திறமை பலராலும் பாராட்டப்பட்டது. பழகுவதற்கு இனிமையான மனிதர் அவர். அவர் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாறு படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாக பாலிவுட்டில் செய்திகள் வெளிவந்தன.
ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வந்த சூழலில் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வெளிவந்தது. இந்த தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு வாரிசு அரசியல் தான் காரணம் என்று பலரும் சர்ச்சை கிளப்பி வருகின்றனர். இது காரணமாக சில முக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சுஷாந்த் சிங் இறப்பிற்குப் பிறகு அவரது ரசிகர்கள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் ஒடிசாவின் கட்டாக்கில் 14 வயது சிறுமி ஒருவரும், அந்தமான் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் கடந்த ஒரு வாரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . இவர்கள் அனைவரும் சுஷாந்தி மரணச் செய்தி கேட்டு அதிலிருந்து மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது