சூர்யா நடித்து வெளிவர இருக்கும் கங்குவா திரைப்படத்தின் 3டி ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் கங்குவா படத்தின் இயக்குனர் சிவா அவர்கள் நெகிழ்ச்சியுடன் சூர்யா பற்றி பேசி உள்ளார்.
அதில் கங்குவா படத்தின் கதையை எழுதிக் கொண்டிருக்கும்போது இது மிகப் பெரிய படமாக வரும் என்று எனக்குத் தெரிந்தது இந்த திரைப்படத்தை எடுத்து விட முடியுமா என்பது தான் எனக்கு பெரிய சவாலாக இருந்தது.
நான் எங்கு சென்றாலும் சூர்யா அவர்களின் ரசிகர்கள் என்னிடம் கேட்பது அண்ணனுக்கு ஒரு மாஸ் ஆன நல்ல படம் கொடுங்கள் சார் என்று கேட்பார்கள் அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் உங்க அண்ணன் எங்க சூர்யா சாருக்கு கங்குவா மாபெரும் வெற்றி படமாக இருக்கும்.
சூர்யா சாரைப் பொறுத்தவரை காலை நாலு மணிக்கு எழுந்து மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு ஆறு மணிக்கு படப்பிடிப்புக்கு ரெடியாகுவார். அது மட்டுமல்ல இது வேணுமா அது வேணுமா அது பண்ணனுமா என்ற எந்த ஒரு கேள்வியும் கேட்க மாட்டார் தண்ணிக்குள் இறங்க சொன்னால் உடனே இறங்கி விடுவார், மலை மேலே ஏற சொன்னால் ஏறிவிடுவார் நான் சொல்வதை தயக்கமின்றி செய்தார் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகுந்த சவாலுடன் கங்குவா பாத்திரத்திற்கு ஆகச்சிறந்த அர்ப்பணிப்பையும் உழைப்பையும் கொடுத்திருக்கிறார் சூர்யா சார்.
கண்டிப்பாக இத்திரைப்படம் பெரிய வெற்றி திரைப்படமாக அமையும் என்று கூறியிருக்கிறார் சிறுத்தை சிவா.