கருப்பு படம் உலக அளவில் ரூ. 300 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கும் நிலையில் ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஆகியோருக்கு கார் பரிசளித்து அசத்தியிருக்கிறார் சூர்யா.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய கருப்பு படம் தான் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் கோலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற படமாகும். கருப்பு ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. அதன் வசூல் வேட்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த ஆண்டு ரூ. 300 கோடி வசூலை தொட்ட முதல் தமிழ் படம் என்கிற சாதனை படைத்திருக்கிறது கருப்பு. இந்நிலையில் தன் படத்தை மக்கள் கொண்டாடுவதை பார்த்த சூர்யாவோ ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு, எடிட்டர் கலைவாணன் மற்றும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஆகியோருக்கு ரூ. 28.5 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா BE6 Batman எடிஷன் காரை பரிசாக கொடுத்திருக்கிறார்.










