வேட்டையன் திரைப்படம் சமூகத்திற்கு நல்ல கருத்தை கொடுத்து இருந்தாலும் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் திரைப்படத்திற்கு இருந்த வரவேற்பு இல்லை என்பது தான் உண்மை.
தயாரிப்பு தரப்போ படம் வெளியான சில தினங்களிலே வேட்டையன் நல்ல வசூல் செய்து உள்ளதாகவும் ரஜினிக்கு மாபெரும் வெற்றி படம் என்றும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
சமீபகாலமாக ஒரு திரைப்படம் சரியாக போகவில்லை என்றால் உடனே கேக் வெட்டி மூணாவது நாளே மாபெரும் வெற்றி என்று போஸ்டர் வெளியிடும் பழக்கம் கோலிவுட்டிலும் தொடர்கதை ஆக உள்ளது. அது சில வருடங்களாக ரஜினி படத்திற்கு நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒரு புறம் இருக்க ரஜினி ரசிகர்கள் ஒருவர் வேட்டையன் சரியாக வசூல் செய்யாததற்கு காரணம் ரத்தன் டாட்டா இறப்பு ஒரு முக்கிய காரணம் என்று கூறி உள்ளார். அது மட்டும் அல்ல விஜய் ரசிகர்கள் படத்தை பற்றி அவதூறு பரப்பினார்கள் என்று கூறி வருகிறார்.
ஏற்கனவே வேட்டையன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை Vettaiyan கலெக்சனுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி விஜய் அஜித் போன்ற ஸ்டாரின் படங்கள் முதல் மூன்று நாட்களில் செய்யும் வசூல் தான் படத்தின் வெற்றியை முடிவு செய்யும் ஆனால் வேட்டையன் வார இறுதியை தவிர பெரிதாக ஒன்னும் கலெக்ட் செய்யவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.
வேட்டையன் விஜயின் GOAT திரைப்படத்தின் வசூலையே இன்னும் நெருங்கவில்லை என்பது தான் உண்மை.