Tuesday, September 8, 2026
-- Advertisement--

சூப்பர்ஸ்டார் விஜய் பெருந்தன்மை இல்லாத ரஜினி…? அப்செட் ஆன ஜெயிலர் காரணம் என்ன தெரியுமா..!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார் .

தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அதன் பின் நடிகர் கமலுடன் ஒன்று சேர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

ரஜினிக்கு அறிவுரை சொன்ன கமல்:

ரஜினியிடம் கமல் நீங்களும் நானும் சேர்ந்து நடித்த உங்களுடைய வளர்ச்சி பாதிக்கும் நீங்கள் ஹீரோவாக நடியுங்கள் என்று கூறியுள்ளார் அதன் பின் தனது குருநாதர் பாலச்சந்தர் அவர்களிடம் சில அறிவுரைகள் கேட்டுக்கொண்டு அவரின் ஆசியோடு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அடுக்கடுக்காக படங்களில் நடித்து வந்தார் ரஜினி.

கமலை முந்திய ரஜினி:

ரஜினியின் துள்ளலான சுறுசுறுப்பான நடிப்பு மற்றும் அவரது ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஜினி படங்களை ரசித்து பார்க்க ஆரம்பித்தனர்.

ரஜினி அவர்களின் திரைப்படங்கள் கமல் திரைப்படங்களை தாண்டி வசூலில் மாபெரும் சாதனைகள் படைத்து வந்தது. கமர்சியல் ஃபார்முலாவை கையில் எடுத்துக் கொண்ட ரஜினி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் பெரிய ஸ்டாராக உயர்ந்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற்றார். கமல்ஹாசன் காமர்ஷியல் சினிமாவை குறைத்து கொண்டு நல்ல வித்யாசமான கதை அம்சங்கள் கொண்ட கதைகளை மட்டும் தேர்ந்து எடுத்து நடித்து வந்தார். உலக நாயகனாக வலம் வந்தாலும் உலகம் முழுவதும் அதிகம் மாஸ் ரஜினிக்கு இருந்தது.

ரஜினி வராதீங்க இங்க விஜய் இருக்காரு:

நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் ரஜினி விமான நிலையத்திற்கு சென்றபோது அங்கு உள்ள ரசிகர்கள் சிவாஜியை பெரிதாக பொருட்படுத்தாமல் ரஜினியை கொண்டாட ஆரம்பித்தார்களாம். அந்த நேரத்தில் ரஜினியிடம் சிவாஜி கூறியது இது உன்னுடைய காலம்டா நல்ல என்ஜாய் பண்ணு என்று கூறி இருக்கிறார் சிவாஜி. அது போல ரஜினி அவர்கள் சில வருடங்களுக்கு முன் கோவை செல்ல விமான நிலையம் செல்ல இருந்தாராம் அப்போது விமான நிலைய காவலர்களே தற்பொழுது நீங்கள் இங்கு வர வேண்டாம் ஏற்கனவே ஒரு நடிகரின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கோனோர் இங்கு கூடி இருக்கிறார்கள் என்று கூறி உள்ளார்கள். அந்த நடிகர் வேற யாரும் இல்லை தளபதி விஜய் அவர்கள் தான். இதனை விஜயின் பெயரை குறிப்பிடாமல் இந்த சம்பவத்தை ரஜினியே கூறி உள்ளார்.

அன்று ரஜினி போல இன்று விஜய் அவர்களின் அசுர வளர்ச்சி அவர்தான் இன்று அடுத்த சூப்பர் ஸ்டார் இன்று அனைவராலும் அழைக்கப்படும் அளவிற்கு உள்ளது. எப்படி ரஜினி படங்களை ரசிகர்கள் ஒரு நேரத்தில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்களோ அதுபோல விஜய் படங்கள் வெளியானால் தியேட்டரில் திருவிழா நடப்பது போல மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விஜய் படங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று அறிவித்திருந்தார்கள். அது மட்டும் அல்லாமல் ரஜினி இருக்கும் போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வெளிப்படையாகவே தியேட்டர் உரிமையாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், தயாரிப்பாளர்கள் என்று அனைவரும் பேச தொடங்கினார்கள்.

ரஜினியை முந்திய விஜய்:

ஒரு நேரத்தில் ரஜினி திரைப்படங்கள் சினிமாவில் ரெக்கார்ட் பிரேக் செய்யும் அது மட்டுமல்லாமல் ரஜினி திரைப்படங்கள் வசூலை யாராலும் நெருங்க முடியாது அந்த அளவிற்கு தனது மார்க்கெட்டை உயர்த்தி வைத்திருந்தார் ரஜினி. தற்பொழுது விஜய் திரைப்படங்கள் பல ரெகார்ட் செய்து வரும் நிலையில் ரஜினியின் திரைப்பட வசூலையே அசால்ட்டாக மிஞ்சி வருகிறது.

ரஜினி ரெக்கார்டை விஜய் முறியடிப்பது போய் தற்பொழுது காலம் மாறி விஜய் ரெக்கார்டை ரஜினியால் முறியடிக்க முடியுமா என்று கூறும் அளவிற்கு ரஜினிக்கு போட்டியாளராக விஜய் வைத்து பேச ஆரம்பித்தார்கள்.

விஜய் 200 கோடி தாண்டி சம்பளம் வாங்குவதாகவும் ரஜினி அவர்கள் 200 கோடி சம்பளம் வாங்குவதாகவும் தகவல்.

அப்செட் ஆன ரஜினி:

சமீபத்தில் நடந்த ஜெயிலர் இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் விஜஹைய் அரபிக் குத்து இடம் பெற்று இருந்தது. அப்போதே ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆனார்கள். அதனை தொடர்ந்து கன்னட ஸ்டார் ஷிவன்னா நான் தளபதி விஜய் ரசிகன் என்று கூறினார். VTV கணேஷ் தளபதி விஜய்க்கு அப்பறம் தலைவரை தான் நான் இவளோ Discipline பாக்குறன்னு கூறினார். விஜய் அந்த நிகழ்ச்சியில் இல்லை என்றாலும் விஐய் பற்றியும் அவரது படத்தை பற்றியும் ரஜினி பட இசை வெளியிட்டு விழாவில் அனைவரும் பேசி வந்தார்கள். அது தான் ரஜினிக்கு கொஞ்சம் டென்ஷன் அதன் அவர் பேசும் போது கடைசியில் நாசுக்காக விஜயை தனக்கு கீழ் என்று குட்டி கதை மூலம் கூறி உள்ளார் என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

என்ன தான் இருந்தாலும் சூப்பர்ஸ்டார் என்பது ஒரு போஸ்ட் போல CM PM மாதிரி அது ஒரு போஸ்ட் அந்த இடத்துக்கு மாறிக்கிட்டே இருப்பாங்க என்று maturity ஆக ஒரு நேரத்தில் பேசிய ரஜினி பெருந்தன்மையாக விஜய் சூப்பர்ஸ்டார் ஆக இருக்கட்டும் என்று என் சொல்ல முடியவில்லை என்று ரசிகர்கள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்போதுமே சூப்பர்ஸ்டார் ரஜினி தான்… தளபதி விஜய் தான்..ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் பெரிதல்ல அது போல விஜயும் சூப்பர் ஸ்டார் படத்தை விரும்பவில்லை என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டாலே போதும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles