அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் கடந்த 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனன் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பாலா, சமுத்திரகனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர் ஜே விஜய், முனீஸ்காந்த், காளி வெங்கட் உட்பட பலர் பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். கல்லூரியில் நிகழும் சம்பவத்தை காமெடி கலந்த சென்டிமென்ட் வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் சிபி சக்கரவர்த்தி. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
தமிழ் சினிமா நீண்ட நாட்களுக்குப் பிறகு காமெடி கலந்த சென்டிமென்ட் திரைப்படமாக டான் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ்சினிமாவில் வெளியாகும் நல்ல படங்களையும் படத்தில் பணியாற்றிய குழுவினரையும் பாராட்ட தவறியதே இல்லை.
இந்த வகையில் தற்போது திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து பாராட்டினார். மேலும் படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினி சூப்பர் கா படம் நன்றாக இருக்கிறது. நீங்க நல்லா நடிச்சிருக்கீங்க. கடைசி 30 நிமிடம் என்னுடைய கண்ணீரை தடுக்க முடியவில்லை என கூறியுள்ளார். இதனை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியான பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.