Wednesday, March 26, 2025
-- Advertisement--

SUPER STAR RAJINIKANTH JAILER TRAILER எப்படி இருக்கு..!!! ட்ரைலர் உள்ளே.

நெல்சனின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

ஜெயிலர் ட்ரைலர் பார்த்த பின் நிச்சயமாக இந்த தடவை மிஸ் ஆகாதுன்னு ஒரு பெரிய நம்பிக்கை ரசிகர்களிடம் நிலவி வருகிறது.


ஹாலிவுட் தரத்தில் ட்ரைலரின் ஓப்பனிங் காட்சி. குடும்ப பின்னணியில் ஒரு MASS ACTION கதையை கொடுக்க முயற்சி செய்து இருப்பது தெரிகிறது. ரஜினியின் மகனாக வசந்த் ரவி போலீசாக நடித்து உள்ளார். ரஜினிக்கு பேரனாக ரித்து ராக்ஸ் ரித்திக் நடித்து உள்ளார். மனைவியாக ரம்யாகிருஷ்ணன் நடித்து உள்ளார்.

சைலன்ட் ஆக மாஸ் செய்யுமா ஜெயிலர்:

ட்ரைலரின் வரும் காட்சிகள் குடும்ப பின்னணியில் ஒரு மாஸ் படம் போல தெரிந்தாலும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தை பெரிதாக காட்டாமல் சஸ்பென்சாக வைத்து உள்ளார் நெல்சன். அனிருத்தின் பின்னணி இசை பட்டாசாக உள்ளது.

ட்ரைலரில் இடம் பெற்ற வசனங்கள்:

ரஜினி : ஒரு அளவிற்கு மேல நாம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்.

ரம்யாகிருஷ்ணன்: கொஞ்சம் இதோட நிறுத்திக்கலாமே
ரஜினி : ரொம்ப தூரம் போய்ட்டேன் FULLAH முடிச்சிட்டு தான் திரும்ப வர முடியும்

VTV GANESH : இந்த மாறி ஆளுங்க பூனை குட்டி மாறியே இருப்பாங்க திடீர்னு புலி யா மாறுவாங்க.

சைலன்ட் ஆக நெல்சன் சம்பவம் செய்வாரா AUG 10 தியேட்டரில் பார்ப்போம்.

தற்பொழுது ட்ரைலர் ரிலீஸ் ஆன 30 நிமிடங்களில் 1M பார்வையாளர்களை கடந்து சென்று இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles