தளபதி விஜய் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த இடத்தில இருக்கும் மாபெரும் நடிகர். இவருக்கு தமிழ் நாட்டில் எவ்வளவு ரசிகர்கள் அதிகமோ அதே அளவில் கேரளாவிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்.
கேரளாவில் விஜய் படம் வெளியாக போகிறது என்றால் அங்கு உள்ள சூப்பர்ஸ்டார் படங்கள் கூட தள்ளிப்போகும் அந்த அளவிற்கு விஜயின் மார்க்கெட் எகிறி உள்ளது. அது மட்டும் அல்லமால் ரஜினிக்கு அடுத்து ஓவர்சீஸ் பிசினஸ் யாருக்கு அதிகம் என்றால் சந்தேகமே இல்லை அது விஜய்க்கு தான்.
தற்பொழுது செய்தி என்ன என்றால் போன வாரம் சன் டிவியில் விஜய் நடித்த “போக்கிரி” திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. எப்போதும் TRP ரேட்டிங்கில் விஜய் படம் தான் முதலில் இருக்கும் ஆனால் இந்த தடவை விஜயின் “போக்கிரி” படம் இரண்டாவது இடத்திலும் சுந்தர் சியின் “அரண்மனை” படம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.