நடிகை சன்னி லியோன் தவறான படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு நல்ல படங்களில் நடித்து எப்படியாவது ஒரு கதாநாயகியாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சன்னி லியோன் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் பாலிவுட் தயாரிப்பாளர்கள் சன்னிலியோனை வைத்து படம் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் சன்னி லியோன் தமிழில் வீரமாதேவி ஒ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் சமீபத்திய நீச்சல் குளம் வீடியோ தான் பெரிய வைரலாகி வருகிறது.

சன்னி லியோன் ஷூட்டிங்குக்கு புறப்பட்ட நேரத்தில் அவரை குடை பிடித்து பத்திரமாக அழைத்துச் வந்தார்கள் அவருடைய உதவியாளர்கள். அவர் நீச்சல் குளத்தை நெருங்கும் நேரத்தில் அவருடைய நண்பர் ஒருவர் அவருக்கே தெரியாமல் திடீரென்று ஓடிவந்து அவரை நீச்சல் குளத்தில் தள்ளி விட்டார்.

அதனால் முழுவதும் நனைந்த சன்னிலியோன் டென்ஷனாகி தன்னை நீச்சல் குளத்தில் தள்ளி விட்ட நபர் மீது தான் அணிந்திருந்த செருப்பைத் தூக்கி எறிந்து அடித்தார்.
கோபமான சன்னி லியோன் அருகிலிருந்த உதவியாளர்கள் பரபரப்பாக காணப்பட்டார்கள். தற்பொழுது இந்த வீடியோ 24 லட்சத்திற்கு மேலான பார்வையாளர்களை கடந்து உள்ளது.