சென்னை: சென்னை போதை பொருள் வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது.
நடிகை மீனா சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவரை தொடர்ந்து வேறு யாருக்காவது போதைப்பொருள் விற்பனை செய்கிறார்களா அல்லது இவருக்கும் போதைப் போல் இருக்கும் கும்பலுக்கு என்ன தொடர்பு என்று போலீசார்கள் விசாரித்து வருகின்றனர்.
ராயப்பேட்டை வணிக வளாகத்தில் போலீசார் மீனா போதை பொருள் வாங்குவதை கண்டறிந்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் இவர் யாரிடம் போதைப் பொருள் வாங்கியுள்ளார் என்றும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் இதுவரைக்கும் யாரிடம் விற்பனை செய்து உள்ளார்கள் என்றும்
போதை பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்றதாக கைது செய்யப்பட்ட மீனாவிடம் போலீசார் பல கோணங்களில் பல கேள்விகள் கேட்டு விசாரித்து வருகின்றன அதில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும் சில கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்வதாக என கேள்வி எழுப்பி விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிவில் தான் இவர் யாரிடமிருந்து போதைப் பொருள் பெற்றுள்ளார் யாரிடமெல்லாம் விற்றுள்ளார் என்று தெரியவரும். இதில் மாணவர்கள் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு இவர் சப்ளை செய்து வந்தாக தகவல்கள் வெளிவந்து உள்ளது.
போதைப்பொருள்கள் விற்பனை வழக்கில் கைதான சின்னத்திரை நடிகை மீனாவை போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி நடிகை மீனாவுக்கு 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.
நடிகை மீனா தற்பொழுது புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இனி தீவிர விசாரணை நடத்தி இது சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.