சீனாவில் ஆரம்பித்த கொரானோ என்னும் தோற்று வைரஸ் தற்போது உலகெங்கும் 250 நாடுகளுக்கு மேல் பரவி வருகிறது. இந்நோய் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நோய் பரவாமல் இருக்க சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டியது மட்டும் தான் தற்போது இந்நோய் பரவாமல் இருக்க ஒரே வழி.
எல்லா நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர்.இதனால் அவர்கள் பொழுதை பெரும்பாலும் டிவி பார்ப்பதில் தான் செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொலைக்காட்சியின் TRP அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்நிலையில் சன் டீவியோ பழைய மெகா ஹிட் தொடர்களான மெட்டிஒலி, சித்தி போன்றவற்றை ஒளிபரப்பி வருகிறது.
ஆனால் விஜய் டீவியோ அதன் சிறப்பு நிகழ்ச்சிகளான லொள்ளு சபா, பிக்பாஸ் போன்றவற்றை ஒளிபரப்பி வருகிறது. இந்த TRP யுத்தம் இந்த ஊரடங்கு உத்தரவு முடியும் வரை தொடரும்.