சின்னத்திரையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் ஏதுமின்றி சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப் பட்டு மீண்டும் சீரியல் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று சித்தி-2. இந்த சீரியலில் நடிகை ராதா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகை ராதாவிற்கு கணவராக சரண்யா பொன்வண்ணன் நடித்து வந்தார்.
தற்பொழுது இவருக்குப் பதில் பிரபல குணச்சித்திர நடிகரான நிழல்கள் ரவி நடிக்க உள்ளார். இது குறித்த புகைப்படங்களை ராதிகாவின் மகள் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.