உலகெங்கும் பரவி வரும் கொரானா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது. பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர் கோடிக்கு மேலானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் கொரானா தாக்கம் அதிகமாக இருப்பதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சின்னத்திரை கலைஞர்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இந்நிலையில் சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் அக்னி நட்சத்திரம். இந்த சீரியலில் அகிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை மெர்ஸினா.
தற்போது அவர் படப்பிடிப்பிற்கு வர முடியாததால் சென்னையில் கொரானா தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் அந்த சீரியலில் இருந்து அவர் விலக உள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.