தமிழ் சினிமாவில் பல தயாரிப்பு நிறுவனங்கள் இருப்பினும், முன்னணி நிறுவனமாக திகழ்வது சன் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான்.
இந்நிறுவனம் தயாரிக்கும் பெரிய கதாநாயகர்களின் படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை புரிந்து வருகின்றன. இந்நிலையில் ரஜினி, விஜய், அஜித், சிவகார்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இந்நிறுவனம் தயாரித்து உள்ளது.
தற்போது இந்நிறுவனம் ஊரடங்கு காலத்திலும் படங்களை வாங்குவதில் மும்மரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் இந்நிறுவனம் அண்ணாத்த, அரண்மனை 3 , D44 போன்ற படங்கள் வாங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் சிவகார்திகேயனியுடன் ஒரு படம், விஜய் சேதுபதியின் ஒரு படம், தளபதி 65 , காலபைரவா, காஞ்சனா 4 உள்ளிட்ட படங்களை வாங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.