முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து கோட் சூட்டில் மட்டுமே வந்துகொண்டிருந்த விஜய், முதல் முறையாக இன்று பட்டு வேஷ்டி மற்றும் சட்டையில் தலைமைச் செயலகம் வந்தது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது மேலாளர் ஜெகதீஷ் வீட்டு இல்ல புதுமணை புகுவிழாவிற்காக பட்டு வேஷ்டி சட்டையில் சென்று இருந்த விஜய் அப்படியே அங்கிருந்து தலைமை செயலகம் வந்துள்ளதால் இந்த மாற்றம் என தெரியவந்துள்ளது.
விஜய்யின் இந்த செயல்பாடு அதிகாரிகளுக்கே வியப்பை கொடுப்பதாக உள்ளது. அதேபோல முதல்வரான பிறகு எப்போதும் கோட் சூட் அணிந்தபடியே அரசு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க செல்லும் போதும் கோட் சூட் அணிந்தே விஜய் சென்று இருந்தார். தினமும் கோட் சூட் அணிந்தபடியே தலைமை செயலகம் வரும் முதல்வர் விஜய் இன்று பட்டு வேஷ்டி சட்டையில் தலைமைச் செயலகம் வருகை தந்தார்.










