Thursday, August 13, 2026
-- Advertisement--

‘கொடி’ கோட்டைக்குச் செல்லுமா? சர்ச்சைகளுக்கு மத்தியில் விளக்கம் அளித்த சுப்ரமணியசிவா!

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் சுப்ரமணிய சிவாவிடம், சமீபத்தில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கொடி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சுப்ரமணிய சிவா, அந்தக் கொடி புதிதாக உருவாக்கப்பட்டதல்ல என்று விளக்கமளித்தார். பல ஆண்டுகளாக தனுஷ் ரசிகர் மன்றத்தின் அடையாளமாகவே அந்தக் கொடி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், திரைப்படங்கள் வெளியாகும் நேரங்களில் அலங்காரத் தோரணங்களாகவும், ரசிகர்களின் குடும்ப விழாக்களிலும் அதே கொடியே பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், அண்மைக் காலமாக சில ரசிகர்கள் அந்தக் கொடியை வாகனங்களில் பொருத்தும் வகையில் புதிய வடிவத்தில் தயாரித்து கொண்டு வந்ததாகவும், அதுவே தற்போது அதிக கவனம் பெற்றுள்ளதாகவும் சுப்ரமணிய சிவா தெரிவித்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles