Wednesday, July 17, 2024
-- Advertisement--

கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து பலியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா…?

கொரோனா கிருமித்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்கள் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்ட போதிலும் கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக மருத்துவமனையில் இடமில்லாததால் கொரோனா நோயாளிகள் சிலர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா என்ற நகரில் கொரோனா நோயாளிகள் ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர் அந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது.

இந்த தீவிபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles