தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் கீழ் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மேற்கொண்டார். தேர்வு முடிவுகளை உடனடியாக மாணவர்கள் பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மறுமதிப்பீடு / மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் பின்னடைவு ஏற்பட்டிருந்தால் அதற்காக இரண்டு விதமான வாய்ப்புகள் முதல்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் ஜூன் 17 முதல் 19ஆம் தேதி வரை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது
இன்று காலை 9.30 மணிக்கு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்நிலையில் 5.69 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற வாய்ப்பளிக்கப்படுகிறது.
அதன்படி, ஜூலை 8 முதல் ஜூலை 15 வரை துணைத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக மே 26 முதல் ஜூன் 9 வரை விண்ணப்பம் செய்யலாம். வரும் 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 6 நாட்கள் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் ஆசிரியர்கள் சரியான முறையில் விடைத்தாள்களை திருத்தியுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். போதிய மதிப்பெண்கள் போடவில்லை என்று தெரிந்தால் உடனே மறுமதிப்பிட்டிற்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17,132 ஆகும்.ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,774 ஆகும்.
தமிழகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,
94.31 சதவீதம் பேர் தேர்ச்சி
மாணவிகள் 96.47 சதவீதம் தேர்ச்சி
- மாணவர்கள் 92.15 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு SSLC தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. மாணவர்கள் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in தளங்களில் மதிப்பெண்களை சரிபார்க்கலாம்..










