Saturday, October 10, 2026
-- Advertisement--

ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு திமுக ஆட்சி மீது கடும் குற்றச்சாட்டு…!

திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியிருந்தார். தன்னுடைய பள்ளிக்கு அனுமதி வழங்க கடந்த திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டதாக அவர் தெரிவித்தது பேச்சுப்பொருளானது. இந்த நிலையில், அவரின் இந்த கருத்திற்காக திமுகவினர் அவரை இழிவான பேசி வசைப்பாடுவதாகவும், இந்த தாக்குதலுக்கு எல்லாம் தான் அஞ்சமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் இன்று பதிவிட்டுள்ள அவர், “திமுக ஊழல் அரசு என கூறிய என்னுடைய கருத்திற்காக திமுகவினர் என்னை வசைப்பாடுகிறார்கள்.

ஆனால், மாநில அரசு அவரிடம் NOC சான்றிதழ் வழங்க அதிகப்படியான பணம் கேட்டதால், அந்த சிபிஎஸ்இ பள்ளியை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் கேட்டுக்கொண்ட காரணத்தால் அவரது அறக்கட்டளையின் இடத்தில் நான் இலவச NIOS பள்ளியை இயக்கி வருகிறேன். எங்களிடம் மாநில அரசின் அங்கீகாரம் இல்லாததால், இப்பள்ளிக்கு திமுக அரசாங்கத்திடமிருந்து அவ்வப்போது நெருக்கடிகள் ஏற்பட்டன. மாநில அரசின் ஒப்புதலைப் பெற முயற்சித்தோம்.

ஆனால், அதற்கு பணம் கேட்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் தேக்கத்தில் இருந்தது. இதற்கிடையே, தென்காசியில் இயங்கும் வரும் பள்ளியில் புதிய கட்டடம் கட்ட மாநில அரசிடம் DTCP அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். திமுக ஆட்சியில் இந்த அனுமதி பெற எப்படிப்பட்ட லஞ்சம் கேட்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும்.அனுமதிக்காக நாங்கள் அமைதியாக காத்துக்கொண்டிருந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அனுமதி வரவில்லை. தற்போது தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அனுமதி எளிதாக அளிக்கப்பட்டது. அதற்கு எந்தவிதமான பணமும் அளிக்க தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு நான் தவெக அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles