ஸ்ரீ லீலா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை. சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் நன்றாக நடனம் ஆடும் நடிகை என்றால் அந்த லிஸ்டில் ஸ்ரீ லீலா உண்டு. அந்த அளவிற்கு ஸ்ரீ லீலா நடனம் மற்றும் நடன அசைவுகள் ரசிக்கும்படி இருக்கும். GUNTUR KARAM என்ற மகேஷ் பாபு படத்தில் ஸ்ரீலாவின் நடனம் தியேட்டரையே அதிரவிட்டது. பல ஹிட் படங்களில் நடித்து வந்த ஸ்ரீ லீலா புஷ்பா 2 படத்தில் KISSIK பாடலில் செம ஆட்டம் போட்டு அசத்தி இருப்பார்.

திறமையான நடிகை தற்பொழுது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இன்னும் சில தமிழ் படங்களில் நடிக்க கதைகளும் கேட்டு வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீ லீலா பற்றி சில சுவாரசிய தகவல்களும் வெளிவந்து உள்ளது. சமீபத்தில் MBBS படிப்பை முடித்த இவர். பல சமூகசேவைகளை சத்தம் இல்லாமல் செய்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்தார். அதன் பின் 2025 ஆண்டு மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து மூன்று குழந்தைகளுக்கு ஒரு தாயக உள்ளார். அவர்களை அன்புடன் பத்துக்கொள்வது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளதாக தகவல்.

23 வயதில் ஒரு நடிகையாக மட்டும் அல்லாமல் சிறுவயதிலே சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இவரை போல உள்ளவர்களை பாராட்டலாம்.