பக்ரீத் பண்டிகை, முகூர்த்த தினங்கள் மற்றும் தொடர் வார இறுதி விடுமுறையால் மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க மே 26 முதல் 30ஆம் தேதி வரை 4,195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வது வழக்கம்.இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர்,பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை 80 பேருந்துகளும், புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாள்களிலும் தலா 170 பேருந்துகளும் இயக்கப்படும்.










