Thursday, April 18, 2024
-- Advertisement--

அடுத்த வாரம் திருமணம்..உடல்நலக்குறைவு தந்தை மரணம்.. தந்தையின் சடலம் முன்பு தாலிகட்டிய மகன்…!!! சோகத்தில் ஊர்மக்கள்.

கள்ளக்குறிச்சி அருகே இறந்த தந்தையின் உடல் முன் மகன் தாலி கட்டிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் திமுக பிரமுகர் இவரது மனைவி அய்யம்மாள் பெருவங்கூர் ஊராட்சி தலைவியாக உள்ளார்.

இவர்களது மகன் பிரவீனுக்கும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சண்முகநாதன் சுபாஷினி தம்பதியின் மகன் சொர்ணமாலியாவுக்கும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரும் 27ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதனிடையே ராஜேந்திரனின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நேற்று அதிகாலை இறந்தார். மணமகனின் தந்தை திடீரென இருந்ததால் இருவீட்டாறு மிகுந்த சோகத்தில் இருந்தனர். எனவே இந்த திருமணம் நடைபெறுமா? அல்லது நின்று போகுமா? என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இறந்த ராஜேந்திரனின் உடல் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. உற்றார் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். இதில் ஒரு சில உறவினர்கள் ராஜேந்திரன் மகன் திருமணத்தை பார்க்க மிகுந்த ஆசியுடன் ஏற்பாடு செய்து வந்தார். ஆனால் மகனுக்கு திருமணம் செய்து வைக்காமலே இறந்து விட்டாரே என்று வேதனையுடன் புலம்பினர்.

அப்போது சில ராஜேந்திரன் உடலுக்கு முன்பே திருமணம் செய்யலாமே என ஆலோசனை கூறியுள்ளனர். இதை எடுத்து பெண் வீட்டாரிடம் சம்மதம் கேட்டு ராஜேந்திரனின் உடல் அருகே கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று மதியம் மணமகன் பிரவீன் மணமகள் சொர்ணமாலியாவுக்கு தாலி கட்டினார். அப்போது மணமக்களை உறவினர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி வாழ்த்தினர்.

பின்னர் மணமக்கள் இருவரும் ராஜேந்திரன் காலை தொட்டு வணங்கினர். ஒரு பக்கம் துக்க அனுசரிப்பும் மறுபக்கம் திருமண வைபவமும் நடைபெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மணமக்களுக்கு தாலி கட்டிய பின்னர் ராஜேந்திரன் உடலை இடுகாட்டுக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles