உலக சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய நடிகர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் கமலஹாசன். தன் ஆறு வயதிலிருந்தே தன் வாழ்க்கையை சினிமாவிற்காக அர்ப்பணித்தவர்.

தற்பொழுது எந்த மொழி நடிகராக இருந்தாலும் சரி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றாலும் புது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றாலும் அவர்கள் முதலில் பார்ப்பது தான் கமலின் படங்கள் தான். சிறு நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அனைவரும் கமலஹாசனை ஒரு முன்னுதாரணமாகவே நினைக்கின்றனர்.


சமீப காலமாக கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் மக்களுடன் மிக நெருக்கமாக உள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து கமல் பல படங்களில் தற்போது கமிட் ஆகி நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் கமல் களம் இறங்கியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் படத்தில் கமல் நடித்திருந்தார். அது மிகப்பெரும் வரவேற்பையும் தமிழ்நாட்டில் ஒரு புரட்சியும் ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்து இணையத்தை சூடாக்குகின்றன.

அந்த வகையில் கமலுக்கு இந்தியன் 2 படத்தில் ஏழு வில்லன்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் என ஏழு நடிகர்கள் இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கின்றனர். சும்மாவா ஏழு வில்லன்களே உலகநாயகனுக்கு பத்தாது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
