DON அட்லியின் அசிஸ்டன்ட் டைரக்டர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து எடுத்த இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்புடன் இன்று ரிலீசானது. தொடர்ந்து சில சொதப்பலான படங்கள் தமிழில் வர ரசிகர்களுக்கு இந்த டான் ஆறுதல் கொடுத்தாரா இல்லையா என்பதைப் பார்ப்போம்.

கதை:
தன் தந்தையின் கட்டாயத்தினால் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து இன்ஜினியரிங் படித்து வரும் சக்கரவர்த்தி (சிவகார்த்திகேயன்) அங்கு அவர் செய்யும் சேட்டைகள், தவறுகள், காதல், எமோஷனல் என்று கதை நகர்கிறது. படத்தோட ஒன்லைன் நமக்குள்ள திறமை இருக்கு அத நாம கண்டு பிடிச்சிட்டா லைஃப்ல நம்ம தான் DON என்பது தான் ஒரு வரிக் கதை. சக்கரவர்த்தி (சிவகார்த்திகேயன்) தன்னிடம் என்ன திறமை உள்ளது என்பதை தெரிந்து கொண்டு வாழ்க்கையில் ஜெயித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை. சுவாரசியமாக ஜாலியாக தொடங்கிய படம் கிளைமாக்ஸ் நெருங்கும் போது மனதுக்கு ஒரு விதமான உணர்வை தருகிறது.

சிவகார்த்திகேயன் முந்தைய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வசனம் குறைவாக இருந்ததால் என்னமோ இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட வசனங்களை கொடுத்துள்ளார்கள் அவர் பேசும் வசனங்களும் நன்றாக இருந்தது. சிவகார்த்திகேயனின் நடிப்பு படங்களுக்கு படம் மெருகேறிக் கொண்டே போகிறது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் சிவா கண் கலங்க வைத்துள்ளார். நடனத்திலும் பெரிய முன்னேற்றத்தை இந்த படத்தில் பார்க்க முடிந்தது. பக்கா இன்ஜினியரிங் காலேஜ் பையனாக நடித்து அசத்தியிருக்கிறார் சிவா. மொத்த படத்தையும் கவனமாக சுமந்து சென்று உள்ளார்.

பிரியங்கா மோகனன் எந்த ஒரு ஓவர் ஆக்டிங் இல்லாமல் அங்கயற்கண்ணி என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். சிவா பிரியங்கா காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது.

எஸ் ஜே சூர்யா இயக்குனர் என்பதை தாண்டி எப்படிப்பட்ட நடிகர் என்பதை நாம் மாநாடு படத்திலேயே பார்த்துவிட்டோம் அதன் பின் மீண்டும் அவர் நடிப்புக்கு தீனி போட்டு உள்ளது DON. பூமி நாதன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

சமுத்திரக்கனி தனது மகனின் எதிர்காலத்தை நினைத்து பயந்து தன் மகனை எப்படியாவது பெரிய இன்ஜினியராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அப்பா கதாபாத்திரம். கடைசி 40 நிமிடங்களில் அவர் தான் படத்துக்கு பெரிய தூண்.
VJ விஜய், பாலா மற்றும் சிவாங்கி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
பிளஸ்:
சிவகார்த்திகேயன் நடிப்பு
எஸ் ஜே சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மெசேஜ்
கலகலப்பான காமெடி காட்சிகள்
அனிருத் பின்னணி இசை மற்றும் பாடல்கள்
மைனஸ்
பெரிதாக சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை.
மொத்தத்தில் DON தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி அனைவருக்கும் இருக்கும்.
DON ஜெயித்தாரா என்று கேட்டால் இளைஞர்களுக்கு தேவையான மெசேஜ் சொல்லி பெரிதாக ஜெயித்துவிட்டார் என்று கூறலாம்.
ரேட்டிங்: 3.75 /5
Verdict : BLOCKBUSTER HIT