தமிழில் முன்னணி நடிகர்களில் பட்டியலில் சிவகார்த்திகேயனும் உள்ளார். விஜய் டிவியில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை சிறிதும் தோய்வின்றி எடுத்து செல்வார். அவருடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கும். சிவாவின் கிண்டலான பேச்சே அவரின் பெரிய பலம். டிவியில் இருந்து ஹீரோவாக போகிறேன் என்று சொன்ன போது சிரித்தவர்களும், கிண்டல் செய்தவர்களும் அதிகம் ஆனால் யாரெல்லாம் தன்னை பார்த்து கிண்டல் செய்தார்களோ இன்று அவர்களே வாயடைத்து போய் நிற்கிறார்கள் அந்த அளவிற்கு தனது திறமையினால் சிவா வளர்ந்து உள்ளார்.
ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் சொல்லும் வசனம் தான் நினைவிற்கு வருகிறது ” ஒரு நாள் இல்ல ஒரு நாள் நானும் பெரிய ஹீரோ ஆவேன் ஆடுவேன் தமிழ்நாடே என் பின்னாடி ஆடும் ” இந்த வசனம் போல சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாடு மக்களிடம் ஒரு பெரிய வரவேற்பு இருப்பது உண்மை தான்.
அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் குறும்படங்கள் நடித்து உள்ளார். அது போல அட்லீயின் மனைவி பிரியாவுடன் ஜோடியாக ஒரு ரொமான்டிக் குறும்படம் நடித்து உள்ளார். இருவருக்குமே சிவகார்த்திகேயன் நெருக்கமான நண்பர்.
தனது நெருங்கிய நண்பரான அட்லீயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது தளபதி விஜயின் “செலஃபீ புள்ள” பாடலுக்கு ஆடி அசத்திய சிவகார்த்திகேயன். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது இதோ அந்த வீடியோ