Sunday, July 14, 2024
-- Advertisement--

சிவகார்த்திகேயன் – ARM கூட்டணி..!!! விஜய்க்கு சொன்ன கதையில் சிவகார்திகேயனா…!!! வெளியாக இருக்கும் மாஸ் அப்டேட்.

சிவகார்த்திகேயன் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா பந்தயத்தில் ஓடிய பல முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் படம் என்றால் மக்களும் விரும்பி வந்து பார்க்கிறார்கள். தயாரிப்பாளர்களும் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை எடுத்தால் லாபம் பார்க்கலாம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனின் யதார்த்தமான நகைச்சுவை கலந்த நடிப்பு தான் அவருடைய வெற்றிக்கு காரணம்.

தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு கடைசி இரண்டு படங்கள் சரியாக வசூல் செய்யவில்லை என்பது உண்மை ஆனால் கடைக்குட்டி சிங்கம் படத்தின் இயக்குனர் பாண்டியராஜன் அவர்களை கூப்பிட்டு சன் பிக்சர்ஸ் இதுபோல ஒரு குடும்ப படத்தை எடுத்துக் கொடுங்கள் அதில் சிவகார்த்திகேயனை நடிக்க வையுங்கள் என்று கூறி அதன்பின் வெளியானது தான் நம்ம வீட்டு பிள்ளை.

சிறு சறுக்கலை சந்தித்த சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டுப்பிள்ளை மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் பெரிய லாபத்தை கொடுத்தது. இருந்தாலும் ஹீரோ சீமராஜா மற்றும் மிஸ்டர் லோக்கல் பெரிதாக ஓடவில்லை என்றாலும் போட்ட தொகையை எடுத்து விட்டார்கள் என்று கூறி வருகிறார்கள் சிவகார்த்திகேயன் தரப்பு.

தற்பொழுது கோடம்பாக்கத்தில் யாருமே எதிர்பார்க்காத செய்தி ஒன்று பரவி வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து இயக்க இருந்தது ஏ ஆர் முருகதாஸ் ஒரு சில பிரச்சனைகளால் அந்தப் படத்தை விட்டு விலகிவிட்டார் முருகதாஸ். தற்போது ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளாராம்.

ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் எழுதிய மான்கராத்தே என்ற கதையில் நடித்த சிவகார்த்திகேயன் பல்வேறு மேடைகளில் முருகதாஸ் சார் கூட பணிபுரிய ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்து வந்தார். தற்பொழுது அவரது கனவு நினைவாக விட்டது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என்று கூறுகிறார்கள் சினிமா வட்டத்தினர்கள். அதற்கு முன் சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் டாக்டர் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனை முடித்த உடன் முருகதாஸுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்து உள்ளது. விஜய்க்கு சொன்ன கதையை சிவகார்திகேயன்க்கு சொல்லியதாக தகவல்கள் வெளியாகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles