சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே கொண்டாடிக் கொண்டிருக்கும் திரைப்படம். காரணம் முகுந்த் வரதராஜன் என்ற மாவீரன் நமது தேசத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த மனிதனின் வாழ்க்கை வரலாற்றினை பற்றிய இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முகுந்த் அவர்களின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்து அசத்தி இருந்தார்.
இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்து மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பாக இந்த படத்தின் இறுதி காட்சியில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்து இந்திய ராணுவத்தின் மீதும் மற்றும் ராணுவ வீரர்கள் மீதும் ஒரு பெரிய மரியாதையை நமக்குள் கொண்டு வருகிறது அந்த அளவிற்கு படத்தின் இயக்கம் இருந்தது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெற்றது இந்த படம் தான் குறிப்பாக கேரளாவில் ஏழு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அஜித் படமே கேரளாவில் 6 கோடி மேல் தான் கேரளாவில் கலெக்ட் செய்துள்ளது ஆனால் சிவகார்த்திகேயன் திரைப்படம் கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. உலக அளவில் 180 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வந்திருந்த நிலையில் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் படி அமரன் திரைப்படம் இன்று 200 கோடியை தாண்டி விட்டதாக தகவல்கள் வெளிவந்து வந்து உள்ளது. ரஜினி கமல் விஜய் அஜித் நடிகர்களின் 200 கோடி ரெக்கார்ட் பட்டியலில் சிவா சேர்ந்து உள்ளார்.
சிவகார்த்திகேயன் படங்களிலே நம்பர் ஒன் படமாக அமரன் அமைந்துள்ளது. விஜய் கொடுத்த துப்பாக்கியை சரியாக பிடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள் சிவா.