Saturday, October 17, 2026
-- Advertisement--

இந்த நேரத்தில் மருந்து வாங்கப்போறீங்களா கண்டிப்பா இதையெல்லாம் நீங்க கவனிக்கணும்..!! ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைக்கும் கோரிக்கை..!!

நடிகர் சிவகார்த்திகேயன் மருந்துக்கடைகளில் மருந்து வாங்கும் பொது ஒருசிலவற்றை கவனிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். குரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது பல இடங்களில் கொரானோவை தவிர்த்து பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சிகிச்சை பெறவும் மருத்துவர்களும் நோயாளிகளும் தயங்கி வருகின்றனர்.

முக கவசம் அணிவது, கை கழுவுதல் மற்றும் சத்தான உணவுகளை உண்பது போன்றவை முக்கியமான முன்னெச்சிரிக்கைகளாக கருதப்படுகின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பகிர்வை பகிர்ந்து உள்ளார். இந்த நேரத்தில் மருந்து வாங்க செல்பவர்களுக்கு நடிகர் சத்யராஜ் மகள் மருத்துவர் திவ்யா சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

அந்த முக்கியமான விஷயத்தை தனது ரசிகர்கள் பயன்பெறும் வகையில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார், ஊரடங்கு காலத்தில் கடைக்கு வர வேண்டிய மருந்துகள் வராமல் இருக்கலாம், வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் வர வேண்டிய மருந்துகள் ஊர் அடங்கினால் வந்து சேர முடியாத நிலையில் இருக்கலாம். அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகளை வைத்து இருக்கலாம். அதனால் மக்கள் அனைவரும் மருந்துகள் வாங்கும்பொழுது மருந்துகளின் காலாவதி தேதியை முதலில் கவனிக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கான வாங்கும் பால் பவுடர், கிரீம், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்துப் பொருட்களிலும் காலாவதி தேதி பார்த்து வாங்குவது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலாவதியான மருந்துகளை உண்பதால் உடலில் பல உபாதைகள் வரலாம், மேலும் மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைக்கும் பணத்தில்தான் மருந்துகள் வாங்குகிறார்கள், வாங்கும் மருந்து குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை வைத்திருக்க வேண்டாம், இதனை உடனே நீக்குவதற்காக ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles