Saturday, June 21, 2025
-- Advertisement--

பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 16-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…!!

பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் நடித்த முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைய தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டடித்த நிலையில் இவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றுதான் மக்கள் அழைப்பர் . இவருக்கு மற்றும் ஒரு பட்டப்பெயர் சிம்மக்குரலோன்.

பராசக்தி தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். பாசமலர், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, கலாட்டா கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, சரஸ்வதி சபதம், திருவிளையாடல் போன்ற பல படங்களில் இவர் நடித்து காவியம் படைத்து உள்ளார். நடிப்பிற்கு ஒரு இலக்கணம் என்றால் அது சிவாஜிதான் என்று பல நடிகர்கள் இவரை பாராட்டி உள்ளனர். இவர் நடிப்பை பாராட்டி இவருக்கு பத்ம பூஷன், தாதா சாகேப் பால்கே விருது, என்டிஆர் தேசிய விருது பெற்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் சிவாஜிகணேசன் நடித்து உள்ளார். ரஜினியுடன் ஒரு படமும் கமலுடன் இரண்டு படமும் விஜயுடன் ஒரு படம் இவர் நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் உடன் இவர் இரண்டு படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சிவாஜிகணேசனுக்கு சாந்தி, ராம்குமார், பிரபு, தேன்மொழி என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதில் பிரபு பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த மாபெரும் நடிகர் திலகம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது 16-வது ஆண்டு நினைவு நாளான இன்று இவரது பிள்ளைகள் அவர் புகைப்படத்திற்கு மாமா மலர்தூவி வணக்கம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்ற. ன காலம் மாறினாலும் இவர் புகழ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles