அனுயா, ராஜேஷ் இயக்கத்தில் “சிவா மனசுல சக்தி” என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அனுயா – ஜீவா இருவரும் சிறப்பாக நடித்து இருந்தனர். அந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. ராஜேஷ் படம் என்றாலே நகைச்சுவை இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஹீரோ – ஹீரோயின் சந்தித்து கொள்ளும் முதல் காட்சியில் தொடங்கி படம் முடியும் வரை நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. சந்தானத்தின் ஒன்லைனர் காமெடி வேற ரகத்தில் இருக்கும்.

முதல் படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு அனுயா தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு அடுத்த அடுத்த படங்கள் முதல் படம் அளவிற்கு சரியாய் அமையாததால் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வந்தார். “மதுரை சம்பவம்”, “நகரம்” போன்ற படங்களில் நடித்த அனுயா ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜயின் “நண்பன்” படத்தில் இலியானாவிற்கு அக்காவாக நடித்து இருந்தார். அதன் பின் பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழே நாட்களில் வெளியில் வந்தார்.

பாடகி சுசித்ரா வெளியிட்ட சுசிலீக்ஸ் புகைப்படங்களில் அனுயா புகைப்படங்களும் வெளியாகின. அந்த படங்களில் உள்ளது நான் illai என்று அனுயா தரப்பில் இருந்து மறுப்பு வந்தது. எது எப்படியோ சுசிலீக்ஸ் பலரது வாழக்கையை புட்டு வைத்தது என்பதே உண்மை.

தற்பொழுது அனுயா தனது நண்பர் ஒருவருடன் நெருக்கமாக நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அனுயா அவரது நண்பருடன் சல்சா நடனம் ஆடியுள்ளார் இதோ அந்த வீடியோ.










