இசைக்கு மொழி கிடையாது என்று பலர் சொல்லி கேட்டு இருப்போம். இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. மேலும் நம் தமிழ்நாட்டில் இசைப் பிரியர்கள் அதிகம்.
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எந்த நல்ல இசையை பாராட்ட தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பல பாடல்களை தன் குரலால் மயக்கியவர் பாடகி சின்மயி. சில காலமாக இவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை எனினும் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளில் திறமையை தெளிவாக வெளிப்படுத்தி வருகிறார் சின்மயி.
சமீபத்தில் இவர் 96 படத்தில் பாடிய பாடல் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆர்வமாக இருந்து வரும் சின்மயி. சமீபத்தில் ரசிகர்களின் விருப்பத்திற்காக பாடல்களை பாட ஆரம்பித்துள்ளார். அதில் தங்கள் விருப்பம் உள்ள பாடல்களை பாடச் சொல்லி அதற்கு உங்களுக்கு பிடித்த பாடலை நான் பாடுகிறேன் அதற்கு பதிலாக நீங்கள் மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய நிதி தரலாமே தொடர்ந்து பல பாடல்கள் வந்துள்ளன.
அவரும் அந்த பாடலை பாடி 30 லட்சம் ரூபாய் நிதி உதவி பெற்று அதனை ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். விளையாட்டாக ஆரம்பித்த இந்த செயல் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உதவியாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.