இந்திய விமானப் பயணிகளுக்கு ஒரு சூப்பர் செய்தியை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம். இந்தியா டு சிங்கப்பூர் விமான சேவைகள் கொரோனா காலகட்டத்தில் இருந்து 100 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக குறைக்கப்பட்டு இருந்தது.
குறைவான விமானங்கள் மட்டுமே வாரம் வாரம் இயங்கி வந்ததால் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகள் சற்று வருத்தத்தில் இருந்தனர் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டு இந்தியாவும் இயல்புநிலைக்கு வந்துள்ளதால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் தனது விமான சேவையை இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு தொடங்க உள்ளது.
தற்பொழுது சென்னை மும்பை டெல்லி பெங்களூர் கொல்கத்தா அகமதாபாத் கொச்சி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வாரத்திற்கு 73 விமானங்கள் மட்டுமே இயங்கி வருகிறது. அதுபோல அமிர்தசரஸ் கோவை ஐதராபாத் திருவனந்தபுரம் திருச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 6 நகரங்களில் 38 விமானங்கள் மட்டுமே இயங்கி வருகிறது.
இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது விரைவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 100 % விமான சேவையை தொடங்க போகிறது. இந்தியா சிங்கப்பூர் இடையே அதிக அளவில் விமானங்கள் இயக்க முடிவு செய்து உள்ளது. இது குறித்து அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.