Thursday, September 10, 2026
-- Advertisement--

அடேங்கப்பா சிம்ரனுக்கு இவ்வளோ பெரிய மகன் உள்ளாரா..? செம ஸ்டைலிஷாக உள்ளாரே..

பிரபல நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கதாநாயகி. பார்க்க உயரமாக இருந்த சிம்ரன் தமிழில் பிரபுதேவா அவர்களுக்கு ஜோடியாக விஐபி என்ற படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படம் நேருக்கு நேர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். சிம்ரனை பொறுத்தவரை நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி தனி முத்திரையை பதித்தார் என்றே சொல்லவேண்டும் அந்த அளவிற்கு இயல்பாக நடிப்பார்.

பாடல் காட்சிகளிலும் நடனத்தில் பின்னி பெடல் எடுப்பார். சிம்ரனை பொருத்தவரை கதைக்கு தேவை என்றால் மறுக்காமல் கிளாமர் காட்டுவார். அதனாலேயே சிம்ரனுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் தொடர்ந்து நடித்து வந்தார் சிம்ரன் இவர் நடித்த படங்களில் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத படங்களும் உள்ளது.

குறிப்பாக கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, ப்ரியமானவளே, கன்னத்தில் முத்தமிட்டால், பஞ்சதந்திரம் போன்ற படங்கள் இன்றும் சிம்ரன் போல ஒரு நடிகை தமிழ் சினிமாவிற்கு திரும்ப கிடைப்பாரா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு நடித்து இருப்பார்.

சிம்ரன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சிம்ரனுக்கு அதீப் ஓடோ மற்றும் ஆதித் வீர் என்ற 2 மகன்கள் உள்ளார்கள்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா கூடிய விரைவில் சினிமாவில் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியமில்லை என்று கூறிவருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles