தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சிம்ரன். இவர் அந்த கால இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தார்.இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
விஜய், சூர்யா, விக்ரம், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். சிம்ரனின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். இவருடன் இணைந்து நடனம் ஆடவேண்டும் என்றால் சக நடிகர்களே கொஞ்சம் தயங்குவார்கள்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய சிம்ரன் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டடித்த புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.