சிம்ம ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
சிம்மம்
உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம் நரம்பு கோளாறு வரும் பிரஷர், சுகர் மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக சிம்ம ராசிக்காரர்களுக்கு மரண பயம் போகும் ஏனென்றால் சனி எட்டாமிடத்தில் இருந்தால் கூட குரு உங்களுக்கு பலவிதத்தில் ஏழாம் இடத்தை பார்ப்பதனால் படிப்படியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அஷ்டம சனியில் திருமணம் அதிகமாக நடக்கக்கூடிய ராசியினர் யார் என்று பார்த்தால் சிம்ம ராசிக்காரர்கள் தான். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஏற்படும். அதற்கு குரு பார்வை தனுசு மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் சிம்மத்திற்கு தனுசு அதிபதியாக பார்ப்பதனால் வேகமாக எல்லாமே நடக்கும் தடையே இருக்காது சுலபமா ஜெயிக்கலாம் என்று நினைப்பார்கள் உங்களை எதிரிகள் ஜெயிக்க முடியாது.
பெற்றோர் பெரியோர் அணுகூலம் ஏற்படும் துணை துணைவியர் பெரிய வெற்றி ஏற்படும். சிம்ம ராசிக்காரர்கள் உடைய அதிர்ஷ்டம் யார் என்றால் சிம்ம ராசி காதலர்கள் சிம்மராசி கணவன்க்கு மனைவியாக இருந்தால் மனைவிக்கு பெரிய அளவு அனுகூலம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும் அதே சமயம் மூன்றாம் நபர்களோடு இருந்தால் புகழ் வரும் நல்லது வரும் இப்படி எல்லாம் நினைத்து ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும்.
அதேசமயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அன்யோனியம் அதிகரிக்கும் குடும்பத்திற்கு தேவையான விஷயத்தை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் துணை அல்லது துணைவியார் பேச்சைக் கேட்பதன் மூலமாக பெரிய அளவு சந்தோஷம் ஏற்படும். நிறைய ட்ராவல் செய்ய கூடிய ராசிகளில் சிம்ம ராசியும் ஒன்று அதிக பொருள் சேர்க்கை ஆடை ஆபரணம் சேர்க்கை முதலீடுகள் எல்லாம் அதிகமாக ஏற்படக்கூடிய ராசிக்காரர் சிம்ம ராசிக்காரர்கள்.
பரிகாரம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு திருநள்ளார் தான் மிக முக்கியம் அதனால் திருநள்ளார் போயேனும் அங்கு நெய்யோ, நல்லெண்ணையோ அல்லது ரெண்டும் சேர்த்து கொடுக்கலாம் 50 கிராம் விபூதி, 50 கிராம் குங்குமம் கொடுத்து கோயில் முறைப்படி பூஜை செய்து வழிபட்டு விபூதி குங்குமம் வாங்கி வருவது நல்லது .










