தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 12 ஆண்டுகள் நடித்தவர் நடிகர் சிம்பு. இவர் பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்திரனின் மகன் ஆவார்.
அதன்பிறகு டி ராஜேந்திரன் இயக்கிய காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக இவர் மாறினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் நிரூபித்தார்.
இவருக்கு ரொமான்ஸும் செய்ய வரும் என்று நிரூபித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார். இப்படத்திற்கு பிறகு சிம்புவின் ரசிகர்கள் இன்னும் அதிகமாயினர்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு படம் கூட வெளிவராத நிலையில் இருந்தார், அதன்பிறகு தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சிம்பு நயன்தாராவுடன் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். இருவரும் ஒன்றாக இருக்கும் பல நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தன. அதன் பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு வாலு படத்தில் ஹன்ஷிகாவிடம் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் இருவரும் காதலித்தனர். ஆனால் இந்த காதலும் ஒரு சில மாதங்களிலேயே முடிவடைந்தது.
இந்நிலையில் சிம்புவின் நெருங்கிய நண்பரான விடிவி கணேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிம்புவின் கல்யாண தேதி விரைவில் வெளியிடப்படும் சிம்பு சீக்கிரம் திருமணம் செய்து கொள்வார், என்று கூறியுள்ளார். இதை கூறியவர் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த செய்தி உண்மையாக இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர்.