தமிழ் சினிமாவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் விஜய்-அஜித் என்ற வரிசையில் சிம்பு-தனுஷ் இருவரும் தான் ஒரு நேரத்தில் இருந்தார்கள். சிம்புவோ காதலில் சிக்கிக் கொண்டு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்த நேரத்தில் தனுஷ் தொடர் வெற்றி படங்களை கொடுத்து சிம்புவை முந்தி சென்றார்.
ஒரு நேரத்தில் தனுசுக்கும் சிம்புவிற்கும் கடுமையான போட்டி நிலவியது என்ன தான் சிம்பு தனுஷ் இருவரும் தங்களை நண்பர்கள் என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்குள் ஒரு பெரிய போட்டி நடந்து கொண்டே இருந்தது.
தனுஷ் தமிழ் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பெரிதாக்கிக் கொண்டார். சிம்பு சில பிரச்சனைகளால் மனம் உடைந்து ஆன்மீகத்துக்கு சென்று மீண்டும் சினிமாவில் சாதிக்க தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக்கொண்டு தற்பொழுது சினிமாவிற்கு COME BACK கடவுது உள்ளார்.
சிம்பு சமீபத்தில் நடித்து வரும் படங்கள் அனைத்தும் ஹிட் படங்களாக அமைய அவருடைய அடுத்தடுத்த படங்களின் லைன் அப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சிம்புவும் தனுஷும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சிம்பு தனுஷ் இருவரும் கட்டிபிடித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். இதனை பார்த்த சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் தற்பொழுது சந்தோஷத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது சரியாய் தான் இருக்குதுனு கமெண்ட் செய்து வருகிறார்கள். தனுஷ் நயன்தாரா மோதல் பிறகு இந்த செய்தி தற்பொழுது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.