டி ராஜேந்தர் நடிகர் மற்றும் இயக்குனர் இசையமைப்பாளர் பாடகர் ஆர்ட் டைரக்டர் என்று தமிழ் சினிமாவில் பல அவதாரங்கள் எடுத்த மனிதர். இவருடைய படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு ஒரு நேரத்தில் இருந்தது. இவருடைய படங்கள் என்றால் விரும்பி குடும்பத்தோடு போய் பார்ப்பார்கள். பல வெற்றி படங்களை கொடுத்த டி ஆர் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மேல் சிகிச்சை பெற அமெரிக்கா சென்றிருந்தார்.
இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சில மாதங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய வயிற்று பகுதியில் ஏற்பட்ட ரத்த கசிவுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக சென்னையில் இருந்து அமெரிக்கா அழைத்து சென்றிருந்தார்கள்.
தொடர்ந்து சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜேந்தர் அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தார் தற்பொழுது உடல்நிலை நன்றாக இருப்பதால் அமெரிக்காவிலிருந்து தனது குடும்பத்தினருடன் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.
டி ராஜேந்தர் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசிய போது பத்திரிகையாளர்கள் சிம்புவின் திருமணம் எப்போது என்று அவரிடம் கேட்க வழக்கம் போல தனது எதுகை மோனையில் பதில் சொல்ல ஆரம்பித்தார். இருமணமும் ஒன்று பட்டால் திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று. சிலம்புக்கு எப்போது கல்யாணம் கல்யாணம் என்று கேட்டால் கடவுள் என்னைக்கு எழுதி இருக்கிறாரோ அன்னைக்கு தான் நடக்கும். காலம் நினைக்கிறது தான் நடக்கும், கர்மா நினைக்கிறது தான் நடக்கும், இல்லன்னா சார் நான் இன்னைக்கு எப்படி வந்து உங்க முன்னாடி பேச முடியும். நான் என்ன இந்த உலகத்தைவிட்டே போய்ட்டேனா நான் என்னமோ மறைஞ்சிட்ட மாறி எல்லாம் செய்தி போட்டாங்களே அதெல்லாம் தாண்டி ஒருத்தன் வந்து நிற்கிறான் காரணம் என்ன கடவுள் கர்மா.
காலம் நினைத்தால் கீழ இருக்கிறவங்க மேல வருவாங்க மேல இருக்கிறவங்க கீழ வருவாங்க இறைவன் நிச்சயத்தால் கண்டிப்பாக அவருடைய திருமணம் நடக்கும். இன்று என்னுடைய பையன் கெஸ்ட் ரோலாக நடித்திருக்கும் மஹா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது நான் எதார்த்தமாக வந்து இறங்கினேன்.
என்னுடைய பையன் நல்ல மனசுக்கு நிச்சயமாக நல்ல திருமகளாக நல்ல குலமகளாக என் வீட்டுக்கு நல்ல மருமகளை இறைவன் அனுப்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் மதங்களுக்கு அப்பாற்பட்டு, இன்ஷா அல்லா ப்ரைஸ் தி லார்ட் அல்லேலூயா ஜெய் ஆஞ்சநேயா ஓம் ஆதிபராசக்தி சிவாய நமஹ எல்லா கடவுளிடம் நான் வேண்டுகிறேன் என்று டி ராஜேந்தர் உருக்கமாக பேசி இருந்தார்.