மாநாடு என்ற பெரிய வெற்றி படத்திற்கு பிறகு சிம்புவிற்கு அடுத்து வெளியாகும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்தார்கள் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த முந்தைய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாக சிம்புவிற்கு அமைந்ததால் இந்தப்படமும் பெரிய ஹிட் படமாக சிம்புவுக்கு அமையும் என்று படத்தின் ரிலீசுக்கு முன்பே அவரது ரசிகர்கள் கூறிவந்தார்கள். மிகப்பெரிய வரவேற்புடன் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியானது படம் எப்படி இருக்கு சிம்புவிற்கு ஹிட் படமாக அமைந்தது என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

கதை:
அம்மா ராதிகா, தங்கை என்று தனது குடும்பத்தோடு கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முத்துவீரன் (சிம்பு) ஒரு சில பிரச்சனைகளால் கிராமத்தை விட்டு மும்பையில் பிழைப்புத் தேடி இசக்கி புரோட்டா கடை என்ற கடையில் தனது அம்மாவின் உறவினர் சிபாரிசில் வேலை செய்கிறார் சிம்பு வேலை செய்யும்போது அங்கு தனது நண்பர்களுடன் ஜாலியாக வாழ்ந்து வரும் சிம்புவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அங்கு நடக்கும் விஷயங்கள் தெரியவருகிறது. புரோட்டா கடை என்ற பெயரை வைத்துக்கொண்டு ரவுடிகளுக்கு தனது நண்பர்கள் அடியாளாக வேலை செய்வதை பார்த்த சிம்பு இதெல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கும் நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் கையில் துப்பாக்கியை எடுக்கிறார்.

இதற்கிடையில் கதாநாயகி siddhi idani உடன் காதல் மும்பையை கைக்குள் வைத்திருக்கும் இரண்டு தாதாக்களில் ஒருவருக்கு அடியாளாக வேலை செய்யும் சிம்புவிற்கு என்ன நடந்தது. முத்துவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.
சிம்பு 21 வயது வாலிபராக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார். அலட்டல் இல்லாத நடிப்பாலும் மெச்சூரிட்டியான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவிற்கு இன்னொரு கமல்ஹாசன் இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறார் சிம்பு. படத்திற்கு பெரிய தூண் ஒன் அண்ட் ஒன்லி சிம்பு தான்.
ஏ ஆர் ரகுமான் சில வருடங்களுக்கு பிறகு பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மெனக்கெட்டு உள்ளார் என்பது இந்த படம் பார்ப்பவர்களுக்கு நன்றாகவே உணர முடியும் அந்த அளவிற்கு மனிதர் பின்னணி இசை அமைத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் அவருடைய குரலில் வரும் மறக்குமா நெஞ்சம் பாடல் அவ்வப்போது சில காட்சிகளில் வந்து செல்வது மயிலிறகால் வருடுவதை போல இதமாக இருந்தது. ஏ ஆர் ரகுமான் GENIUS SIR நீங்க.

கவுதம் மேனன் வழக்கமான தனது ஃபார்முலாவை விட்டு விலகி தன்னாலும் வெற்றிமாறன் அமீர் போல படங்களை கொடுக்க முடியும் என்று களத்தில் இறங்கி நிரூபித்திருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன். முத்து கதாபாத்திரத்தை அவர் எழுதிய விதத்திலும், படத்தின் மேக்கிங் கிங் என்றும் மீண்டும் நிரூபித்துள்ளார். குறிப்பாக மல்லிப்பூ என்ற பாடல் ஒன்றை சரியான காட்சியில் வைத்து அதனை ரசிக்க வைத்தது சபாஷ்.
ப்ளஸ்:
சிம்புவின் எதார்த்தமான நடிப்பு.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை.
இயக்குனர் கௌதம் மேனன் அவர்களின் மாஸ் கிளாஸ் இயக்கம்.
மைனஸ்:
சில இடங்களில் கொஞ்சம் பிசிறுகள் LAG இருந்தாலும் படத்தின் கதையோட்டம் சமாளித்து விடுகிறது.
எளிதில் கணிக்கக்கூடிய சில காட்சிகள்.
Gangster Drama என்பதால் சற்று பொறுமை தேவை.
மொத்தத்தில் வெந்து தணிந்தது காடு சிம்பு மற்றும் கவுதம் மேனனுக்கு மீண்டும் ஒரு வெற்றி படம்.
கூல் சுரேஷ் பாணியில் சொல்லனும்னா வெந்து தணிந்தது காடு சிம்புவிற்கு வணக்கத்த போடு..!!!
Verdict : HIT
Rating : 3.5/5