Friday, October 16, 2026
-- Advertisement--

சிக்மா’ அப்டேட் வந்தாச்சு.. ஜூலை 31ம் தேதி வெளியாகும் ஜேசன் சஞ்சய் படம்!

ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் முதல் படமான சிக்மா ஜூலை மாதம் 31ம் தேதி ரிலீஸாகும் என்று லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதை பார்த்தவர்களோ ஜேசனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வளர்ந்ததுமே அவரை தேடி ஹீரோ வாய்ப்புகள் வந்து குவிந்தது. ஆனால் அவருக்கு நடிப்பை விட இயக்கம் மீது தான் ஆர்வமாக இருந்தது. இதையடுத்து படம் இயக்குவது, திரைக்கதை எழுதுவது குறித்து வெளிநாடுகளில் படித்துவிட்டு நாடு திரும்பினார்.

ஜேசன் சஞ்சயின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரின் முதல் படத்தை தயாரிக்க முன்வந்தது லைகா நிறுவனம். வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் சந்தீப் கிஷனை தன் பட ஹீரோவாக தேர்வு செய்தார். படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்தார்.

சிக்மா என பெயர் வைக்கப்பட்ட அந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் ஆவலை தூண்டியது. சிக்மா எப்பொழுது ரிலீஸாகும் ஜேசன் என்று சினிமா ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். இந்நிலையில் ஜூலை 31ம் தேதி தியேட்டர்களில் சிக்மா படத்தை பார்த்து மகிழலாம் என்று இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles