Thursday, September 10, 2026
-- Advertisement--

அமைதி பேச்சுவார்த்தை நடுவே அதிரடி தாக்குதல்.. டிரம்ப் நடவடிக்கையால் பரபரப்பு!

ஈரான் உடனான போர் முடியப் போகிறது.. இன்னும் சில மணி நேரங்களில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகும் என்றெல்லாம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சொல்லி சில மணி நேரம் கூட ஆகவில்லை.

தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, ஈரானின் தென்பகுதி மீதும் சர்வதேச எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலும் அமெரிக்க ராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானியப் படகுகளை இலக்கு வைத்து அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானின் தென்பகுதி மீதும் சர்வதேச எரிசக்திப் பாதைக்காவின் இந்த திடீர் ஏவுகணைத் தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஈரானின் மிக முக்கியமான கடற்படை மற்றும் விமானப் படைத் தளமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகரை உலுக்கியுள்ளது.

பந்தர் அப்பாஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த தாக்குதல்களை முறியடிக்கப் பந்தர் அப்பாஸ் நகரின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாகச் செயல்பட்டுப் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதேபோன்ற வெடிச்சத்தங்கள் பாரசீக வளைகுடாவின் சிரிக் மற்றும் ஜாஸ்க் பகுதிகளிலும் கேட்டுள்ளன.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles