விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். இவருக்கென்று ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே தமிழ் சினிமாவில் உண்டு. இவர் படங்களில் வரும் பாடல்கள் எப்போதுமே சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் வகையில் இருக்கும்.

தற்போது இவர் நடித்து வெளிவரவுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தின் போஸ்டர்கள் மூன்று வெளிவந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. மேலும் விஜயின் குரலில் அனிருத் இசையில் குட்டி ஸ்டோரி பாடல் மிகவும் வைரலானது.

அதை அடுத்து விஜயின் வாத்தி கம்மிங் பாடல் வெளிவந்தது. இதற்க்கு முதலில் அனிருத் ஆடி அதை சேலஞ்சு விட்டுஇருந்தார். இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பாஷெட்டி வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.