பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே பிரபலம் ஆகிடலாம் என்ற ஒரு எண்ணம் உள்ளதால் அனைவரும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பெரிதும் விரும்புகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலம் அனைவர் தான் ஷெரின்.
என்ன தான் ஷெரின் தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒடுங்கி இருந்தார். தனுஷின் முதல் படமான “துள்ளுவதோ இளமை” படத்தில் துள்ளலான நடிப்பில் இளசுகளின் மனதை கவர்ந்த ஷெரின் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன காரணமோ சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
“வாஷிங் பவுடர் நிர்மா” என்ற விளம்பரம் இன்று கேட்டாலும் பலருக்கு நினைவு வரும். அந்த விளம்பர பாடலுக்கு ஷெரின் மஞ்சள் நிறத்தில் ஒரு மினி டிரஸ் அணிந்து நடனம் ஆடி இணையத்தில் வெளியிட்டு உள்ளார். அதற்கு ரசிகர்கள் அந்த விளம்பரத்தில் வரும் குட்டி பாப்பா நல்ல இருந்திச்சி நீங்க இப்படி டிரஸ் பண்றது நல்ல இல்லனு கமெண்ட் செய்து வந்தனர்.